ஒரு பெண் குழந்தையின் கனவு
![](https://eluthu.com/images/loading.gif)
கருவறையில் கண்விழித்தேன் ,
கை ஊன்றி தவழ்ந்து வந்தேன் ,
16 ரில் பள்ளி படிப்பை முடித்தேன் ,
கல்லூரிக்கு சென்றால் ..........
அறிவியலுக்கு ஆறாயிரம் ,
மருத்துவ படிப்புக்கு ஆறு லச்சம் என்றான் ............,
பெற்றோருக்கு சுமையாக இருக்க ...
வேண்டாம் என்று கல்யாணம் செய்யலாம் என்றால்..
ஆறு சவரன் நகையும் ,
ஆறு இலச்சம் ரொக்கமும் கேட்டான் ,
வேலையில்லாத ஒரு ஆண் மகன்......!!!!!
நான் பிறந்ததையே சுமையாக நினைக்கும்
என் பெற்றோர்கள் ,,,,,,,,,,,,,
அறை வயிற்று கஞ்சிக்கே அல்லாடும் அவர்கள்
யாரிடம் கடன் வாங்குவார்கள் ,
இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால்
அன்று கருவிலேயே கலைதிருப்பேன்...........!!!!!!!!!!!!!!