வாழ்த்துகிறேன்......!
வாழ்த்துகிறேன்......!
வசந்தங்கள்-உன்,
வாசல் தேடி..... வரவேண்டுமென......!
வாழ்த்துகிறேன்......!
மகிழ்ச்சி.......,
மல்கிப் பெருகிட.....வேண்டுமென........!
வாழ்த்துகிறேன்......!
இல்லறத்தில்,.......,
இனிமை தங்கிட..... வேண்டுமென....!
வாழ்த்துகிறேன்......!
மனக்குறைகள்....,
மறந்து.... போகவேண்டுமென........!
வாழ்த்துகிறேன்......!
கடமைகளை......,
காக்கவைக்க........வேண்டாமென........!
வாழ்த்துகிறேன்......!
நன்மை இல்லா செயலை.......,
நாடவேண்டாமென........!
வாழ்த்துகிறேன்......!
வார்த்தைகளுக்குள்..........,
வஞ்சங்கள்.....வேண்டாமென.......!
வாழ்த்துகிறேன்......!
உடல், தளர்ந்தாலும்..........,
உள்ளம் தளர.........வேண்டாமென......!
வாழ்த்துகிறேன்......!
சிந்தனைகள்........,
சிதறிப்போக......வேண்டாமென.......!
வாழ்த்துகிறேன்......!
வேண்டுவன,......வேண்டாதவைகளை.......,
நீ!.....புரிந்துகொள்ளவே.......!