துரோகம்
எத்தகைய வடுக்களும்
விழுப்புண்களாக மாறவேண்டும்
எத்தகைய தோல்விகளும்
வெற்றிகளாக மாறவேண்டும்
ஆக்கப்பூர்வமான கனவுகள்
அழியா காவியங்களாக மாறவேண்டும்
உனது உறக்கங்கள் கூட
உத்வேகத்தை கிளப்ப வேண்டும்
இத்தனை கடமைகள் நாட்டுக்காக உன் தொழிலாக
கொட்டிகிடக்க
தற்கொலை எனும் சொல்லே கூட துரோகம் தானே