என்னை வரையும் ஓவியம் நீ
ஓர் ஊஞ்சல் அசைவதைப் போல
முன்னும் பின்னும்
வந்து போகிறது
உன் நினைவு
ஒரு மழைக் காலத்திற்கு
காத்திருக்கும் விதையைப் போல
உனக்காகக் காத்திருக்கிறது
என் இதயம்
பௌர்ணமிக்குப் பிந்தைய
நிலவைப் போல
தேய்ந்துகொண்டிருக்கிறது
மனசு
உதிரும் நிமிடங்களில்
உதிராமல் நீ
உயிரின் துருவங்களில்
உறையாமல் நீ
உன் வருகையில் துளிர்க்கும்
வறண்டு கிடக்கும்
என் கிளைகள்
உன் தொடுதலில் குழையும்
என் வாழ்க்கையை வரையும்
வண்ணங்கள் !
@இளவெண்மணியன்