அகலாமல் நிற்பது அவள் முகம்

தனிமையில் என் மனம் தழு தழுத்தது
குளிரிலும் பனியிலும் உடல் கொதி கொதித்தது
கயல்விழி அவள் முகம் காணவே துடித்தேன்
கண்களில் விஷம் இன்று கவலையால் வெடித்தேன்
நிலாமுகம் பூவனம் அன்று அவள்
நினைவெல்லாம் நின்று மொய்த்தாள்
நெருஞ்சிமுள் கொடுக்காய் மாறி இன்று
நெஞ்சினிலே அவள் முள் தைத்தாள்
அசைவிலும் அமர்விலும் என்னோடு
அகலாமல் நிற்பதேன் அவள்முகம்
உயிரையே ரணமாக்கி மெல்கிறாள்
உணர்விலே நின்றெனைக் கொல்கிறாள்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (24-Jul-17, 1:58 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 104

மேலே