குறள் வெண்செந்துறை

பெற்றோர் :-

தாயுடன் தந்தையும் தரணியில் தெய்வம்
சேயுடை நலனைச் சேர்ப்பர் பின்னே !

ஒழுக்கம் :-

ஒழுக்கம் மறவா ஓர்ந்திடும் வாழ்வில்
இழுக்கே இல்லை இன்பம் என்றுமே !

கல்வி :-

கல்வியைக் கற்க காசினி உய்யும்
பல்கலை ஓங்கும் பாரினில் நாளுமே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Jul-17, 7:05 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 133

மேலே