என்னைக் கொஞ்சம் உறங்க வைத்தால்
என்னைக்கொஞ்சம் உறங்க வைத்தால் ....
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்
அவள்
காலை எழுந்தவுடன்
கைபேசியில்
பக்கத்து வீட்டு
பள்ளித் தோழியிடம்
பேசினாள்....
நீண்ட நேரம்
பேசிய விசயம்
எல்லாமே பூஜ்யம்தான் !
அவன்
கைபேசியில்
கல்லூரி தோழனிடம்
கிரிக்கெட் ஸ்கோர்
பேராசிரியர் பற்றி
நையாண்டிகள் !
காதலியிடம் பேசிய
காதல்மொழிகள்
கண்டு
களித்த நேரங்கள்
காதலியிடம்
கைபேசியில்
சிரித்தான் பாடினான்
மணிக்கணக்கில்
பேசிக்கொண்டே
கொஞ்சம் செல்லமாக
சண்டையுமிட்டான் !
அம்மா
கைபேசியில்
அடுத்ததெரு மாமியிடம்
மருமகள் புராணம் பாடி
அன்றைய சமையல்
மெகா சீரியல்
பட்டுப்புடவை பார்டர்
அக்கம் பக்கம்
உள்ளவர்கள் பற்றி
வம்பு பேசியது வரை
அந்த கைபேசிக்கே
தொண்டை கட்டியது.
அப்பா
கைபேசி மூலம்
தன் அலுவலக
பணியாளர்களுக்கு
வாழ்த்துகள் திட்டுக்கள்
ஆணைகள் பறந்தன !
கைபேசி
காலை மாலை
இரவிலும்
இடை விடாமல்
கை மாறிக்கொண்டே..
கைபேசியே
மனிதனிடம் பேசினால்..
என்னைக் கொஞ்சம்
தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
நம்மிடம்
வேண்டிக் கொள்ளும் !
பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
