கண்ணா

தேடினேன் அவனை எங்கும்
தென்பட வில்லை கண்ணன்!
ஓடினேன் அங்கு மிங்கும்
ஓரிடம் தனிலும் காணேன்!
பாடினேன் உருகி நெஞ்சம்
பரவசத் தோடு கொஞ்சி
வாடியே நொந்து நைந்தேன்
மாலவா எங்கு சென்றாய்?

மூடிய விழிகள் மெல்ல
முழித்ததும் அவனை வேண்டி
ஆடியின் முன்னே நின்றேன்
அரங்கனை அதிலே கண்டேன்!
நாடிய மாய கண்ணன்
நம்முளே இருப்பான் என்றே
சூடினேன் விருத்த மாலை
சுகமுடன் ஏற்பாய் கண்ணா !!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Jul-17, 1:50 pm)
Tanglish : kannaa
பார்வை : 88

மேலே