காற்றுவெளியிடை கண்ணம்மா

காற்றுவெளியிடை கண்ணம்மா
கவிதை நானும் வரைகிறேன்
காலம் முழுவதும் காதலே
கடற்கரை வாசம் வீசுதே !!!

கண்ணில் தினமும் உன் முகம்
காய்ச்சல் போலே தொடரட்டும்!!
காவிரி நதியோ மார்பினில்
காரணம் இன்றி சிரித்திடவே !!

காட்சி தேவதை என்று
கதைகள் ஆயிரம் உண்டு !!
கன்னம் ஓரம் முத்தம்
கதைகள் இல்லை நிஜமே!!

காதோரம் சிணுங்கும் தோடுகள்
காணாமல் போக பாதைகள் !!
கால்களில் தவழும் கொலுசுகள்
கடவுள் கொடுத்த பரிசுகள் !!

கஞ்சாடை பார்வை போதுமே
கடிகார நொடியும் நிற்குமே!!
கள்ளி வெட்கம் வேண்டுமே
கற்பனை சாவி திறக்குமே!!

காற்றாடி போலே பறக்கிறேன்
கரம்கோர்த்து நாம் நடைக்கையிலே!!
கண்ணன்கூட பாட்டு படிக்கிறான்
கண்ணழகி நீயொருத்தி என்றெனவே !!

காயம் இன்றி ஒருபொழுதும்
காதல் தனித்து இருப்பதில்லை !!
காதலே உன்னைத் தனித்திருந்து
கண்கள் என்றும் இனிப்பதில்லை !!

கருமேகம் மழைத் தூறும்!!
கனவெல்லாம் கரைந்தோடும் !!
காதலியே மறுபிறவி வேண்டும் !!
காற்றுவெளியிடை கண்ணம்மா !!!

எழுதியவர் : கிருஷ் அரி (26-Jul-17, 4:19 pm)
சேர்த்தது : கிருஷ் அரி
பார்வை : 160

மேலே