திமிரும் அழகே

அழகே அழகே
திமிரும் அழகே - உன்
திமிரும் அழகே
மெய் காதல் சிந்தும்
மை கண்கள் - அழகே
பொய் கோபம் பொழியும்
வாய் மொழியும் - அழகே
இதழின் இடையே இடைவெளி அழகே
இளைப்பாறும் இடம் இன்னும் அழகே
இடையில் தெரியும்
இடையும் அழகே
இசை கெஞ்சும் கொலுசும் அழகே
இன்பம் தங்கும் மடியும் அழகே
காலம் வாழும் காதல் அழகே
நம் காதலால் காதல் என்றும் அழகே