சங்கே முழங்கு சங்கே முழங்கு

சங்கே முழங்கு ! சங்கே முழங்கு !

சிறப்பு கண்ணதாசன் சான்றிதழ் போட்டியாளர் ( 13 )

வானம் இடியுடன் மாரியைக் கொட்டவே
கான மயிலும் கலையுடன் ஆடுதே
காட்சி எழிலையும் கண்களும் காணுதே
சாட்சி முழங்குக சங்கு .

கவிதைகளில் நனைந்திடலாம்
கவிவழியே இன்று -- வளர்
கலைகளிலே வென்று -- நம்
கருத்தினிலே சென்று -- தினம்
கனவுதனில் நனிமிகவே
கனிநிகராய் நின்று .

செவிதனிலும் கவிதைகளாம்
செயித்துவிடும் இங்கு -- மனம்
செப்பிடுமே அங்கு -- நலம்
செந்தமிழே தங்கு -- இனி
செருக்கில்லாமல் முழங்குகவே
செவிகுளிரச் சங்கு .

வாழிய செந்தமிழ் வாழியவே எந்நாளும்
நாழிகை தோறுமாய் நம்முன் நிற்கவே
ஊழியம் செய்வோம் உவந்து மகிழவே
ஆழியாய் மாந்துக அன்பு .


நனிபல சீர்மிகு நற்றமிழ் கற்போம்
பனியென வந்திடும் பாவங்கள் நீங்க
தனித்தமிழ் வேண்டியே தாபிப்போம் நாளும்
இனியாவும் நன்மையே ஈங்கு .


சங்கே முழங்குக சந்ததி மேம்பட
பங்கிடவே உண்டோ பரவச செந்தமிழை
மங்காது வாழ்ந்திடுமாம் மாசற்றப் பைந்தமிழ்
தங்கிடுமே நாட்டில் தழைத்து .

ஆக்கம் ;- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Jul-17, 7:34 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 100

மேலே