அருள் செய் நெஞ்சே

அன்பா? செல்வமா? என்ற சூழல் உருவானால் செல்வத்தின் பின்னே தான் யாவரும் செல்வர்...
அன்பை மதியார்...
உன்னுடைய அன்பு என் பசிதீர்க்குமா? என்று கேட்ட மனிதர்களோடு தான் நானும் அன்பைப் பாடுகிறேன்...

அன்பைக் கொடுக்க அன்பை வாங்கிக் கொண்டு அதோ குப்பைத்தொட்டியென்று வீசிவிட்டு பணமில்லா நீயுமொரு குப்பை தான்டா என்று வீசிச்சென்ற உலகின் மேல் நான் கொண்ட அன்பு மாறவில்லை...
யார் மீதும் கோபம் கொள்ளவில்லை...
இந்த உலகச் சூழலில் நான் ஏதோ எரிமலைக்குள் குதித்தாற்போல் உணர்கிறேன்...

இந்த தேகம் வேகும்வரை இச்சூழலில் நானும் வாழ்ந்துதானே ஆக வேண்டும்...
நீதி தேவனின் கட்டளையை மீறிவிடுவதா?
அது மனசாட்சி விரோதமானதாயிற்றே...

அன்பில்லாதவரைக் குப்பையென்றேன்...
அன்பில்லாதவர் என்னைக் குப்பையென்கிறார்...
இரண்டும் உண்மை தான்...
அன்பென்னும் நெருப்பில் எரியும் குப்பை நான்...
மட்காத ஆடம்பரக் குப்பை அன்பிலார்...

நெருப்பை நெருப்பு தான் சுட்டுவிடுமா?
ஆழ்கடலை குவளை நீர் தான் மூழ்கடித்திடுமா??
மாறாத சத்தியமாய் மரணம் வந்து தீர்ப்பளிக்குமென்று காலம் தந்த சேதியும் பொய்த்துவிடுமா???

அருள் செய் நெஞ்சே...
உலராதிருந்து அருள் செய் நெஞ்சே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Jul-17, 7:15 pm)
Tanglish : arul sei nenjay
பார்வை : 546

மேலே