ஒருக்காதல் கண்ணாடி

உடையாதவரைக் கண்ணாடி அழகு
உடைந்தால் காதல் அழகு
சுகமான நினைவுகள்!
முகம் பார்க்கும் போதுக் கண்ணாடி அழகு
முகம் பார்க்காமலே வரும் காதல் அழகு
சுகமான எண்ணங்கள்!
சிதறியக் கண்ணாடியில் பல பிம்பம்
சிதறியக் காதலால் பலத் துன்பம்
மறு ஆக்கம் செய்தால் கண்ணாடி அழகு
காரணம் கண்டறிந்தால் காதலும் அழகு!
சுகமான வலிகள்!
அழுக்குப் படிந்தக் கண்ணாடியும்
அழுக்குப் படிந்தக் காதலும்
கைகள் அழுக்கானால் கண்ணாடி அழகு
எண்ணங்கள் அழகானால் காதல் அழகு!
சுகமானக் காதல்!
கண்ணாடி சிதறல்களை வீதியில் எறிந்தால்
காயங்கள் பலருக்கு! உன் காதல் சிதறல்களை
கவிதையாக எறிந்தால் இன்பங்கள் பலருக்கு!
சுகமானக் கவிதையாய் காதலருக்கு
சமர்ப்பணம் செய்து!
அன்புடன்
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்