சதா பாரம் தூக்கி அலையும் எறும்பு
இருவரும் அருந்தும் தேநீருக்கு கொடுக்க
நீ எதற்கு கைப்பையை
துழாவுகிறாய்
நீ துட்டு தர வேணாம்
தொட்டு தான் போதும்.
**
உன் வாயிலிருந்து
தவறிச் சிந்துகிறது சில உணவு துளிகள்
எறும்பாகிறது என் மனம்.
**
எங்கு சென்றாலும் நிலவு தன் பின்னால் வருவதாக
நினைத்து இன்புறும் சிறுவன் நான்.
நிலவு நீ.
**