கலாமின் பாதையில் செல்லுவோம்
வேற்று கிரகங்கள் தேடி ஏவுகணைகளை ஏவுங்கள்-அதில்
விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத்தையும் தமிழில் பொறித்து ஏற்றுங்கள்
மாற்று உலகம் மனிதன் நாடி அடையும்போது-அங்கே
காற்றுடன் தமிழை சுவாசிக்க ஏற்றபடி அதை மாற்றுங்கள்
வேற்று உயிர்கள் அங்கே காணின் போற்றும் அன்பில் கூடுங்கள்
ஆற்றல் மொழியாம் தமிழில் சாற்றி நாற்றை அங்கே நடவுங்கள்
ஏழாம் அறிவை எழுப்பிட ஏற்றக் கல்வியை புகட்டுங்கள்
மூன்றாம் கண்ணை திறந்து முக்காலமும் கணித்திட முயலுங்கள்
கிரகங்கள் அனைத்திலும் பசும் கன்றுகள் நட்டு வானிலையை சாதகமாக்குங்கள்
கிரகணம் அற்று உயிர்கள் நிலைக்க அப்துல் கலாமின் பாதையில் செல்லுங்கள்!
கவிதாயினி அமுதா பொற்கொடி