என்னுயிர் தாடகையே
என்னுயிர் தாடகையே.....
நள்ளிரவில் பேடுவின் தவிப்பாய் -உன்
நெஞ்சங் குழியில் கசிந்த முணங்கல்
காதலின் ஸ்வரமாய் செவிப்புலன் கதித்தது
பளிங்கு நிலவு பாலாடை கட்டி -மென்
பனியில் நனைந்து பக்கம் நெருங்க
பத்தியம் பஞ்சரம் பற்றி எரிந்தது
தின இதழான பாவையுன் மேனியில் -என்
இதழ்கள் எழுதும் இன்பக் கவிதை
பிரசுரமாக நிதம் தவிக்கிறது
வாமனன் பாதடி அடங்கிய வேந்தனாய்
ஆமை ஓட்டினுள் ஒடுங்கிய உயிராய்-என்
ஆண்மை உனக்குள் தஞ்சமாகிறது
தாடகையாய் தகித்து உயிர் குடிப்பாயோ
தண்டலை தாரமாய் உணர் தணிப்பாயோ
தடவுக்குள் மூழ்கிட தடை தகர்ப்பாயோ...
கவிதாயினி அமுதா பொற்கொடி