அன்பர்களுக்கொரு வேண்டுகோள்

ஏதேதோ எழுதுகிறான் பைத்தியக்காரனென்று என்னைக் கடந்து செல்வோரே சற்று நில்லுங்களே..
இந்த இளம் ஏழைமனிதனின் எழுத்துகளைச் சற்று சிந்தியுங்களே..
இவ்வெழுத்துகளென்ன கற்பனையா?
அல்ல..
நடக்கும் உண்மையின் பிரதிபலிப்பு..
எனது உள்ளமுணர்ந்த சத்தியத்தின் தரிசனம்..

வேலையிலா வெட்டிப்பயலென்று என்னை வெறுத்துச் செல்வோரே சற்று உங்கள் வெறுப்பை ஒதுக்கிவையுங்களே..
வெறுப்பும், விருப்பும் உண்மையை உணரவிடாது அறியாமையென்னும் மாயைத் தோற்றுவிக்குமே...

நானென்ன அன்னை தரசாவா?
நானென்ன மகாத்மா காந்தியடிகளா?
இல்லை மானிடா...
நான் நான் தான்..
அன்பர்களாகிய உங்களின் மித்திரன்..

தமிழால் நானென்ற நான்(அகங்காரம்)ஐ அழித்து அருட்பெருஞ்சோதியின் அன்பையும், கருணையையும் கொண்டே எழுதுகிறேன் மேலோட்டமாக இல்லாமல் அடித்தளத்தை ஆழ்ந்து சிந்தித்தே...

போதனை செய்ய நானொன்றும் குருவல்ல...
மனிதனென்ற நிலையே உன்னதமாயிருக்க,
பட்டங்களும், பதவிகளும் எனக்கெதுக்கு?
மனிதனின் நிலையிலிருந்தே மனிதர்க்குரிய பண்புகளை ஆழ்ந்து சிந்தித்து விளக்கமாய் கவியெழுத முயலும் நானொரு கத்துக்குட்டிதான்...

ஏதோ வேறு உலகிலிருந்து வந்து விளங்காததை எழுதுகிறேனென்று புகழவோ, வெறுக்கவோ வேண்டாம் நெஞ்சே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Jul-17, 6:19 pm)
பார்வை : 444

மேலே