தன்னந்தனியாய்
என்னை மூடிக்
கொள்வதென
முயற்சித்தேன்
எளிதில்
முடியவில்லை
அதில் தோற்றுப்
போக
"பூனையை"
போல் நானும்,
எளிமையாக
கண்ணை மூடிக்
கொண்டேன்
யாரையும் காண
சகியாது
கண்ணை மறைக்க
முடிந்த என்னால்
இருக்கையில்
அமர்ந்த என்
எண்ணங்களை
அகற்ற
முடியாதுபோக
தத்தளித்தேன்
தன்னந்தனியாய்
காட்டில் நிற்கும்
காவல் தெய்வம்
போல் இன்று!
#sof_sekar

