ஓய்வு

ஓய்வு!
கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்

தன்
வளமான வாழ்க்கையை
எண்ணாமல்
வீடு மனைவி மக்களுக்காக
மெழுகாய் உருகி
முதுமையை எட்டிய
அப்பாவிகள் !

மாத்திரைகளின்
உதவியால்
இறுதி யாத்திரையை
தள்ளிப் போடும்
முதுமையின் முகவரிகள் !

தன் பிள்ளைகளின்
அன்புக்காக
பேரக் குழந்தைகளின்
பிஞ்சுக்கால்
உதைக்காக
ஏங்கி நிற்கும்
முதுமையின் விழிகள் !

ஓய்வு ஊதியம்
பெற
நாட்காட்டியில்
நாள் பார்த்து
பூத்துப்போகும்
சோடாபுட்டி
கண்ணாடிக் கண்கள் !

இறைவா
உழைப்புக்கு ஓய்வு
கொடுத்து விட்டாய் !
உள்ளத்திற்கு
ஓய்வு எப்போது ?

அலைபாயும்
நினைவலைகளின்
முற்றுப்புள்ளிக்காக
அமைதிக்காக
ஏங்கி நிற்கும்
முதுமையின்
அடையாளங்கள் !

பூ.சுப்ரமணியன்,'
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (29-Jul-17, 9:57 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : ooyvu
பார்வை : 122

மேலே