சில யுகம் கழிப்போம்
![](https://eluthu.com/images/loading.gif)
தொப்புள் கொடி அறுத்து
தொட்டிலில் போட்டு பிரித்தாலும் ...
தமனி-சிரை எல்லாம் கூட
தாயன்பு தானாய் துளிர்த்திருக்கும் ...
தன்னையறியா தரும்
மழழையின் முத்தம் ...
தாய்-சேய் பரிமாறும்
அன்பின் பரிசுத்தம் ...
தாய்மைக்கு
தலைவணங்குவோம்...
சேயாய் இன்னும்
சில யுகம் கழிப்போம் ...