முற்று பெறாத

கருவறை சுவாசம்
எனக்கும் உனக்கும்
ஆனது
வயிற்று பசிக்கு உணவு
உனக்கும் எனக்கும்
ஆனது
இதயதுடிப்பு கூட
எனக்கும் உனக்கும்
என்றது
உறக்கம் ஓய்வு
உனக்கும் எனக்கும்
ஆனது
இப்படி உனக்கும்
எனக்கும்
ஆன உறவு
கருவாய் சுமந்ததோடு
நின்றதோ?எனில்
இல்லை இல்லை
என்றே காலம்
சொன்னது
போதும் நீ சுமந்தது
என்று
இளைப்பாறுதல் தர
கல்லறையின் கரம்
நீண்டது
இன்று என் நிலையோ
முற்று பெறாதா இக்
கவிதை போல் ஆனது..,
#sof_sekar