தூரத்தில் கேட்குது
எதையும் தாங்கும்
இதயம் இங்கு நான் நலம்
அங்கு நீ நலமா என்று ஆவலாய் கேட்கிறதே உம் காதில் விழுகின்றதா? ||
விழுந்தும் விழாததுபோல் இருக்கின்றாயா? ||
செம்மாதுளையின் சுளைகளைப்போன்று
என்னென்னவோ சுவைமிகு
எண்ணங்களதனைக் கூற
அலை மோதுகிறதென துள்ளம் ||
தூதனுப்ப யாருமில்லை உன்றன் காதோரம் வந்து கிசுகிசுக்க ||
ஆதாரமொன்றே நம் காதல்
சேதாரமாகிடுமோ என்றொரு பயம் ||
பூதாகரம் போல் நம் பிரிவு
நீராகாரமும் மறுக்கிறது
உள் செல்ல தினம்தினம்||
உயிரற்ற உருவத்திற்கு
இரத்த தானமிடுகிறேனோ
அவநம்பிக்கை வினாடிக்கு வினாடி இதயத்தை கொல்கிறது ||
என்றனுக்கோ ஆமென்று சொல்வதாய் அமைதி குளமதில் இலை விழுந் தெழும் மெல்லிய நீரலைப் போன்றொரு தாழ்குரல்
"தூரத்தில் கேட்குது" ||
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
நன்றி : தினமணி கவிதைமணியில் 24.07.2017 பிரசுரமான எம் கவிதை)