கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்-காதல் துளிகள்-06
........கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்.....
காதல் துளிகள் : 06
26.உன்னை நினைக்கும் ஒவ்வொரு மணித்துளிகளிலும் நம் காதலோடு
இணைந்து நானும் புதிதாய்
மீண்டும் மீண்டும் பிறக்கிறேன்....
27.உலகத்தின் அதிசயங்களோடு
உன் உதடுகள் சொல்லும்
இரகசியங்களும் சத்தமின்றியே
இணைந்து கொள்கின்றன...
28.பூக்களில்லா பாலைவனத்தில்
நம் உள்ளங்கள் இரண்டும்
மோதிக் கொண்டதால் காதல் பூக்கள்
அங்கே மெல்லமாய் குடியேறத்
தொடங்கிவிட்டன....
29.எங்கேயோ உதித்த நம் பெயர்கள்
இரண்டும் காதல் நிறைந்த இரு
சொற்களாக காதல் அகராதியில்
இணைத்துக் கொள்ளப்பட்டன....
30.உன் தோள் சாயும் நேரங்கள்
என் மனம் என்னைக் கேட்காமலேயே
உன் மனவானுக்குள் வண்ணத்துப் பூச்சியாய் புகுந்து விடுகின்றது....