சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்

சொலல்வல்லன் சோர்விலன்
அஞ்சான் அவனை
இகல்வெல்லல்
யார்க்கும் அரிது...
இக்குறளுக்கு இதுவரை
எழுதப்பட்ட உரைகளை
விடவும் சிறந்தது
லிவிங்ஸ்டன் எனும்
இனிய நண்பனின்
வாழும் முறை...

மான்கள் பிறந்தவுடன் ஓடக்
கற்றுக் கொள்ளும்...
லிவிங்ஸ்டன் கல்லூரியில்
சேர்ந்த நாள் முதல்
பாடங்கள் கற்றான்
பொறியியல் கிரிக்கெட்டில்
சிக்ஸர்கள் பல அடித்தான்...

எல்லா மதங்களின்
கொள்கைகள் தெரிந்திடினும்
பகுத்தறிவுக் கொள்கை
இவனுடையது...

பதினேழு வருடங்கள்
போதுமானதாயிருந்தது
லிவிங்ஸ்டனுக்கு
நூறு வருடங்கள்
வாழும் முறைகள்
தெரிந்து கொள்ள...

பிரம்மன் படைத்த
எந்திரன் இவனோ
என சொல்லுமளவிற்கு
சிந்தையில் தெளிவு
செயல்களில் தீர்க்கம்...

திராவிட வரலாறுகள்
இவனுக்கு அத்துப்படி
இவனது எண்ணங்கள்
பெரியார் அண்ணா
வகுத்த கொள்கைப்படி...

படிக்கும்போதே ஆசிரியன் போல்
தெளிவிலும் தெளிவு...
பணிபுரியும்போது மாணவன் போல்
கற்பதில் ஆர்வம்...
இவை இவனது அருங்குணங்கள்..

ரம்மி சீட்டு விளையாட்டில்
இவன் ஜெயிக்கும் போதெல்லாம்
இவன் படிப்பில்
கவனம் வைப்பானா என்றும்
இவனது அருமையான
மதிப்பெண்கள் காண்கையில்
இவன் விளையாட்டுக்கு
உகந்தவன்தானா என்றும்
கேள்வி எழ வைக்கும்
காரியத் தீவிரவாதி...

கடமை கண்ணியம்
கட்டுப்பாடு என்பதில்
இவனுக்கு என்றும்
உடன்பாடு...
இவனது பணியில்
பெருமை கொள்கிறது
நாஞ்சில் நாடு... மேலும்
மாசுக்கட்டுப்பாடு...

அன்பு நண்பன் லிவிங்ஸ்டன்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!!

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (30-Jul-17, 6:26 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 169

மேலே