நெஞ்சம் கவர்ந்த மகாகவி பாரதியார்

பாரதியின் ஞான ரதமேறி அளவில்லா வாழ்வின் ஞானம் பெற எனது நொண்டி ஞானரதமே விரைவாய் புறப்படுவாயே...
காத்திருக்கிறார் பாரதி நம் வருகைக்காக வேதபுரத்தில் அந்த கடற்கரை மணலில்...

இருளை ஒளியென்று ஏற்கும்
மனதில் தெருள் குடிகொள்ள,
மருள் நீக்கி,
சாதி மடமையை வேரறுத்து,
அருள்சேர் கீதையும், இயேசுநாதரும் ஒன்றுசேர அல்லாவின் ஆட்சியைத் தெளிவிக்கும் அந்த ஞான ரதமும், வேதபுரமும் ஒன்றுசேர தரிசித்து வந்தோரின் மனதிலும் இருளென்பது இருக்குமோ?

பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் தரிசனம் ஞான ஒளியாய் மனதில் ஒளிர்ந்திட எந்தவொரு ஆணும் பெண்ணைக் குறைவாய் மதிப்படுவானோ?.

எந்தவொரு பெண் மயக்கம் தந்து துன்பத்திலே ஆழ்த்தினாலோ அவளே வேலாய் மாறிக் காக்கிறாளென்று அவருரைத்த அவ்வுண்மையை எனது நெஞ்சமும் மறுக்குமோ?

இல்லறத்திலும் மெய்ஞானமுண்டென்பதை அற்புதமாய் விளக்கிய அவருடைய ஞானத்தை என்னவென்பேன்?

தனது கற்பனைவளத்தாலே உலகமக்கள் உயிர்ப்பதற்கு உதவியாய் பல எளிய படைப்புகளைச் சுந்தரத்தமிழில் தந்தருளிய பாரதியாரின் அவ்வற்புத எழுத்துகளின் மீது ஒரு அறிவார்ந்த சினேகமுண்டாயிற்றே...
என்ன விந்தை இது!
எனது கற்பனைகளுக்கு உரம் சேர்க்கும் அந்த சிறப்புமிகு கற்பனைகளை என்னவென்பேன்?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Jul-17, 7:20 pm)
பார்வை : 726

மேலே