உன் நினைவுகளில் இறக்கிறேன் பலமுறை நான் 555
![](https://eluthu.com/images/loading.gif)
என்னுயிரே...
என் விழி திரையில் விழும்
அத்தனை கனவுகளையும்...
திருடி செல்கிறது
என் இதயம்...
என் கனவில்கூட
நீ வருவதற்கு தாமதம்தான்...
கனவிலும் நான்
காத்திருக்கிறேனடி உனக்காக...
நீ சிந்திய கண்ணீர்
துளியின் ஈரம்...
இன்னும் என்
கைக்குட்டையில் காயவில்லை...
சில நேரங்களில் என்
கண்ணீரும் சேர்வதால்...
நீ மட்டும் ஏனடி என் குருதியின்
சுவையை ருசிக்கிறாய்.....