என்னை கொன்று போனவள்
![](https://eluthu.com/images/loading.gif)
இயங்காத என் இதயத்தை இயக்க வைத்த இன் முகத்தோலே.
செவ்வரளி சிரிப்பால மனச சிதைச்சியடி.
உன் ஒள்ளி உடம்பால என் உசிரல்லாம் கலந்தியடி.
கலங்கி நின்ன என் மனச கரையேத்த வந்தியடி.
இப்ப கட்டெறும்ப போல என்ன கொட்டி விட்டு போனியடி.
செங்கரும்பு சார போல இனிமையா பேசுனியே
இப்ப கருந்தேளு கொடுக்கு போல வார்த்தையால கொட்டி விட்டு போனியடி.
முட்ட முழி கண்ணால என் முத்தத்த கேட்டவளே.
இப்ப எட்ட நின்னு என பார்த்து ஏளனமா சிரிக்கிரியே.
நேற்று வர சொன்னியடி நீர்தான்னு.
இன்று கேட்டியடி நீ யார் னு......
-சாய் சபரிஷ்