காதல் நிறமாலை

மெல்லிய இதழின் புன்சிரிப்பு ...
முகத்தில் துளிரும் சிறு நடிப்பு ...

நிலத்தில் படா மென்நடை ...
நிஜத்தில் தெரியா குறுஇடை ...

வாய் திறக்கா விளையும் உள்மௌனம் ...
விழிகள் திறந்து பயிலும் நறுவதனம் ...

தென்றல் வெட்கும் உன் ஸ்பரிசம் ...
கண்கள் கொட்டும் காதல்விரசம் ...

இவை அனைத்தும் -
கன்னியின் மனம்
காதல் தரித்த பின் ...

பெண்மை எனும்
வெண்கற்றை ஒளி
காதல் எனும்
முப்பட்டகத்தில்
முட்டி விலக
முழு நிறமாலையாய்
முடிவடையும் ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (31-Jul-17, 2:47 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 156

மேலே