கனவும் கசடற கற்பிக்க...
கண்ணகியவளை கள்ளியிடைவெளியில்
கவர்ச்சியாகக் கண்டதினால்
கலாச்சாரக் கட்டுப்பாடு கருகிப்போய் கவலைக்கிடமானதோ...!
கருடபுராணம் கற்றறிந்த கர்மவீரனே கட்டுப்பாட்டை கற்கமறந்து கள்வனானதால்
கந்தனும் களங்கப்பட்டதாய் கருதியெனை கங்கையிறக்கி கரைத்துவிடுவானோ..?
கசங்கிய கருநீல கதர்சேலையை கள்ளியவளோ கருமியாய் கலைத்துநிற்க
கசந்திடவில்லை கடைக்கண்ணால் கலவரப்பார்வையில் கவனிக்கும்வரை...
கக்கிய கடுஞ்சொற்கள் கடவுளே கரம்பதிக்கும் கடவுச்சொற்களா
கட்டணக் கழிப்பறையில் கள்ளச்சாராயத்திற்கு கற்பூரக் கலவையா...?
கடமையாகக் கருதாது கடுமையாக கதையினை களமிறங்கி கண்காணிக்க
கவரப்பட்ட கள்ளிமனம் கனத்துப்போய் கலையானதை கடைசியாகக்
கண்டறிவாய்...
கனவிற்கும் கற்புண்டு கட்டுக்கோப்பாய் கலந்துவிட்டேன்
கடற்காற்றிலும் கவியுண்டு கரிக்கோலிடம் கற்றறிக...