வாழ்த்துகள் போதாதுதான்
மே பதினொன்றில்
மேலேறும் எவரெஸ்டில்
ஜார்கண்டில் பிறந்த பெண்ணாய்
சாதனைக்கு திருமகளாய்
உருவாகும் முயற்சிக்கு
ஒருபோதும் வயது தளர்வில்லையென்று
நாற்பத்தைந்து வயதில்
நம்பிக்கை உன் பெயராய்
பிரேமலதா அகர்வாலென்று
பேச செய்தாய் அன்றோடின்றும்
ஏறுமுன்னே சில பேர்கள்
ஏளனம் செய்தபோதும்
எண்ணத்தில் உயர்வென்று
இருப்பத்தி மூன்றாயிரம் அடிகள்
எட்டிய போதும் இதற்குமேல்
ஆறாயிரம் அடிகள்
ஆக்ஸிஜனே இல்லாமல்
சுவாசம் செயற்கை சுறுசுறுப்பில்
சுத்தமாய் நூறுக்கும் நூற்று ஐம்பதுக்கும்
குளிரோ குறையாய்* நடுநடுங்க
கொண்ட செயல் தோல்வியின்றி
கையுறை கழன்றபோதும்
கைவிடா வெற்றிக்காக
இருநூற்று பதினாறு பேர் ஏனோ
இதற்குமுன்னே இறந்தபோதும்
எனக்கு வேண்டும் முதன்முதாய்
இப்புகழ் கிடைக்கமென்று
உன் கொடி நட்டுவிட்டே
உயரமோ இருபத்தி எட்டா யிரம் அடியில்
உன்னை வாழ்த்தும்
உண்மை நெஞ்சமாய்
பெண்மை போற்றும்
பெருமையோடு நாங்கள்.