சர்வம் பேய் மயம்- திகில் சிறுகதை
அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்...
அவர்களில் ஒருவரிடம் பணக்காரத்தனம்...
மற்றவன் கெச்சலாய்..
அவன் கைகளின் மண் வெட்டி கடப்பாரை...
இரவுகளின் எல்லாம் அடங்கிக்கிடக்கிறது, வீடுகள், வீடுகளினுள் மனிதர்கள்..
தெரு விளக்கு வெளிச்சத்தை தவிர எங்கும் இருள்...!!!
ஏலே முனியா வேகமா
நடலே... என்று அதட்டல் போடுகிறார் அந்த பெரிய மனிதர்-வெங்கைய்யா....
இதோ எசமான்-என்று நடையை எட்டி நடக்கிறான் முனியன்..
டார்ச் வெளிச்சத்தில் இருளை நீக்கி, கிழித்து வழி காட்டுகிறது..
அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்..
தூரத்தில் சுடுகாடு தெரிகிறது..
அங்கே புகைந்து கொண்டிருக்கிறது...
ஏலே அங்க என்னடா எரியுது..?
மேட்டுதெரு கந்தசாமி இன்னைக்கு தூக்கு மாட்டி
செத்து போய்ட்டானுங்க அவனைத்தான் வெட்டியான் எரிச்சுட்டு
இருக்கான்..
ம்ம்ம்ம்ம்ம்ம்... சரி வெட்டியான் கிட்ட விஷயத்தை சொல்லிட்டியா..?
சொலிட்டேனுங்க எசமான்.. இன்னைக்கு மதியம் தான் 500 ரூபா பணமும்
சரக்கும் வாங்கி தந்து விஷயத்தை சொன்னேனுங்க...
சரி.. சரி.. நட...
சுடுகாடு நெருங்குகிறது...
எரிந்து கொண்டிருக்கிறது கந்தசாமியின் பிணம்...!!
வயிற்றை புரட்டும் தோல் கருகும் நாத்தம்... குடலை புடுங்கி
தள்ளுகிறது... மேல் துண்டால் மூக்கை மூடிக்கொள்கிறார்
வெங்கய்யா...
ஏலே.. இங்க வா..
வெட்டியான் ஓடி வருகிறான்..
சொன்னதுலாம் நியாபகம் இருக்குல்ல..?
இருக்குங்க எசமான்...
ஆருக்கிடையும் மூச்சு விட கூடாது.. விட்டேனு தெரிஞ்சது
தொலைஞ்ச...
சரிங்க எசமான்...
அப்பொழுது பிணம் தடக்-என்று எழுகிறது...
ஆ... அரண்டு போகிறார் வெங்கைய்யா...
வெட்டியான் பிணைத்திடம் ஓடுகிறான்...
தாயோளி மவனே என்னலே எந்திக்க படுலே மூதி...
என்று வைத்திருந்த தடிக்கம்பால் அடிக்கிறான்..
டொப் டொப் டொப் டொப்
டொப் டொப் டொப்....
பிணம் படுக்கிறது...
வெங்கைய்யா வேர்த்து விறு விறுத்து போகிறார்..
வேர்வை ஆறாக ஓட ஆரமிக்கிறது...
ஏலே என்னலே இது...?
அது அப்படி தானுங்க.. எரிக்க ஆரமிச்சதும் பொணத்துக்கு
உசுரு வந்து ஓட ஆரமிக்க பாக்கும், இப்படி நாலு சாத்து சாத்துனாதான்
அடங்கும்...
சரி நடலே.. இடத்த காட்டு...
ஏலே முனியா வா...
அவர்கள் நடக்க துவங்குகிறார்கள்..
வெங்கைய்யா திரும்பி பிணத்தை பார்க்கிறார்...
பிணம் எரிந்து கொண்டிருக்கிறது...
முகத்தை திருப்பிக்கொள்கிறார்...
அய்யா இங்கன தான் அவளை பொதைச்சோம்..
முனியா தோண்டுல,, வெட்டியா நீயும் சேர்ந்து
தோண்டு....
சதக்... சதக்... சதக்...
வக்..சார்க்...வக்...சார்க்....
தோண்ட ஆரமிக்கிறார்கள்...
வெங்கைய்யா அப்படியே உக்காந்து கொள்கிறார்...
நினைவை பின்னோக்கி பார்க்கிறார்...
சென்ற வருடம்...
மதியம்...
வயக்காட்டை பார்வையிட்டுக்கொண்டிருக்கிறார்,,,
பார்வையிட்டுக்கொண்டே பம்புசெட் பக்கம் வருகிறார்...
பம்புசெட் அறையில்....
ம்ம்ம்...ம்ம்ம்ம்...ஆ..ம்ம்ம்... என சத்தம்..
கதவின் அருகில் வந்து தடுப்-என உதைத்து திறக்கிறார்...
உள்ளே அவர் மகன் வேலு யாரோ ஒரு பெண்ணோடு முயங்கிக்கொண்டிருக்கிறான்...
டேய்...நாயே....
அப்பா.. திடுக்கிட்டு எழுகிறான்..
யாருல இவ...?
அந்த பொண்ணை பார்க்கிறார்..
அவள் வயலில் வேலை செய்யும் வள்ளி...
டேய்... என்னால இது...?
அது,, அது... அப்பா வந்து...
சீ... மொத ட்ரெஸ்ஸ போடுலே...
அவசரமாய் கைலியை அணிந்து கொள்கிறான் வேலு..
வெளிய போடா நாயே...
அவசரமாய் வெளியே போகிறான்...
வெங்கைய்யா திரும்பி வள்ளியை பார்க்கிறார்...
அவளின் நிர்வாணமான உடல் அவரை சூடேற்றுகிறது....
வேட்டியை உருவுகிறார்....
வெளியே வேலு சிரித்துக்கொள்கிறான்...
எல்லாம் முடிந்து வெளியே வருகிறார்..
அப்பா...
என்னலே..?
நானு...?!!
சரி சரி போ....
உள்ளே நுழைகிறான்..
அப்பா...அப்ப்பா... பதறியடித்து வருகிறான்..
என்னலே..?
அந்த பொண்ணு செத்துடுச்சுப்பா....
என்னலே சொல்ற...??
ஆமப்பா அந்த பொண்ணு செத்துடுச்சு...
உள்ளே பொய் பார்க்கிறார்கள்..
வள்ளி வாய் பிளந்து இறந்து கிடந்தாள்...
ஏலே இவளை தூக்கி கிணத்துல போட்ரு...
போலீஸ் கேஸ்ச நான் பாத்துக்கிருதேன்.. இன்ஸ்பெக்ட்டர் நம்ம ஆளுதான்
நான் கவனிச்சுக்குறேன்...
அடுத்தநாள் வள்ளியின் பிணம் நிர்வாணமாய் கிணற்றில்
மிதந்து கொண்டிருந்தது...
கேஸ் தற்கொலை என்று முடிக்க பெற்றது...
சில நாட்களுக்கு பிறகு..
வெங்கைய்யா வீடு பசு ரத்தம் கக்கி இறந்து கிடந்தது...
வெங்கைய்யா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை...
ஒருநாள் வேலு வயக்காட்டில் இறந்துகிடந்த போதுதான்....
கன்னத்தில் பலமாய் அறைந்த தழும்பு..
ரத்தம் கொப்பளித்து சட்டையை நனைத்திருந்தது...
பேய் அடிச்சுருக்கு.. ஊர் பேசிக்கொண்டது...
வெங்கைய்யா பயந்து போனார்...
மலையாள மந்திரவாதியை அழைத்து
கேட்க...
நீங்க கொன்ன வள்ளி தான் இப்போ பேயா அலையுறா அவ தான்
உங்க மகனை கொன்னது...
அடுத்து நீங்க தான்...
சாமீ நான் பண்ணது தப்பு தான்..
என்ன எப்படியாவது காப்பாத்துங்க...
அவளோட போனோம் புதைக்கபட்டிருக்கு
அத தோண்டி எடுத்து எரிச்சுட்டுங்க... அப்படி பண்ணாதான்..
அவளால உங்கள ஒன்னும் பண்ண முடியாது...
நாளைக்கு பௌர்ணமி பேய்களுக்கு சக்தி கூட்டுற நாள் அதனால
இன்னைக்கே எரிச்சுடுங்க... இல்லனா உங்களுக்கு சாவு நிச்சயம்...
குப்-என்று அழுகிய பிணத்தின் நாற்றம் அடித்து வெங்கைய்யா
நினைவைக்கலைத்தது....
பார்த்தார்... உடல் பாகங்கள் எல்லாம் அழுகி போய் கிடந்தது...
ஏலே சீக்கிரம் எரிச்சுலே...
டேய் வெட்டியா போய் சீமைதண்ணிய
கொண்டுவாடா....
சீமை தண்ணி இல்ல முனியா நீங்க கொண்டு வருவீங்கனுலா நெனச்சேன்...
அட கிறுக்கு **தி..... உன்கிட்ட என்ன சொல்லிருந்தேன்...
போதைல மறந்துட்டேன் முனியா...
அடேய்,, எழவெடுத்த பயலுகளா காரியத்தை கெடுத்துட்டீங்களேடா.... இப்போ
என்ன பண்றது...??
திரும்பி பார்க்கிறார்....
சிதை எரிந்து கொண்டிருக்கிறது....
ஏலே முனியா இந்த பொணத்தை
அதோ எரியுதுல கந்தசாமி பொணம்
அதோட சேர்த்து எரிச்சுடு...
ஏலே வெட்டியா என்ன பார்வை..?? போ... போய் சீக்கிரம் போலெ...
வள்ளியின் பிணத்தை கந்தசாமியின் பிணத்தோடு சேர்த்து
எரிக்கிறார்கள்...
அப்பாடி சோலி முடிஞ்சது.... முனியா வா போவோம்...
அவர்கள் நடக்க துவங்குகிறார்கள்...
கேட்டை நெருங்குகிறார்கள்...
திடுமென பலத்த சத்தம்...
காற்று பலமாக அடிக்க ஆரமிக்கிறது...
டமார் என கேட் பூட்டிக்கொள்கிறது....
ஆ... ஐயோ.. பேய்.. பேய்..
ஏலே முனியா ஓடாத நில்லு நில்லுல....
முனியன் ஓடி மரத்தில் மோதி விழுகிறான்....
காற்று உச்சத்தில் வீச...
பின்னால் எரிந்து கொண்டிருந்த பிணம் இரண்டும்
எழுகிறது....
கம்பை ஓங்கிக்கொண்டு வந்த வெட்டியானை
ஒரு விசுறு வீசுற தூர போய் விழுந்தான்...
எரியும் நெருப்பு உடல்களாய் இரண்டு பிணங்களும்
வெங்கைய்யாவை நோக்கி ஓடி வருகிறது....
தடக் தடக் தடக்....
ஆ..... ஐய்யோ.... அம்மா....
ஓடி வந்த இரண்டு பிணங்களும் வெங்கைய்யாவை அனைத்துக்கொள்கிறது....
ஆ,,, ஆ,,, ஆ,,, ஆ,,,,,,ஆ,,,,,,,
பின்குறிப்பு.....
சொல்ல மறந்து விட்டேன்...
கந்தசாமி வள்ளியின் காதலன்....