ஒருபக்க காதல்கதை பாகம்-31

இரவு முழுதும் அம்மாவின் வார்த்தைகள் அவனுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது..மனம்விட்டு அழுததில் சற்று களைப்பு நீங்கியதுபோலவும் ..ஒரு தெளிவு கிடைத்தததுபோலவும் ..சிறிது நேரத்தில் அயர்ந்து உறங்கினான்..தூங்கும்முன் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருந்தான்


அடுத்தநாள் காளை பத்துமணிக்கு காப்பி அருந்திக்கொண்டிருந்தான் ..எதிரில் அவள்


அவள்: அம்மா எப்படி இருக்காங்க ?

அவன்: நேத்து நீ பாத்த மாதிரியேதான் இருக்காங்க

அவள்: ஹ்ம்ம் ...நீயும் அப்படியேதான் இருக்க

அவன்: என் மனசு ஏத்துக்குறவரைக்கும் மாறாது

அவள்: அதுவரைக்கும் எனக்குப் பொறுமை இருக்கணுமே

அவன்: உன்னப்பத்தி நான் தெரிஞ்சுக்கிட்டே ஆகணும், நானும் நெறய முறை பாத்துட்டேன்..உன்னோட 100% உண்மைல 1% நடிப்பு கசடு வழியுது..அது அப்பட்டமா தெரிஞ்சாலும்..சரியான காரணங்களால வாயடைக்கிற..அந்த 1% என்னனு தெரிஞ்சிட்டா மத்த 99% உண்மையான்னு உறுதிப்படுத்திருவேன்

அவள்: நான் எதுக்கு உன்கிட்ட நடிக்கணும்...நீ யாரு?...என் குரல் மட்டும்தான் நடிக்கும்..அதுவும் மைக் முன்னாடி (சிறு கோவம் புருவ இடைவெளி குறுகியது)

அவன்: இல்ல, இவ்வளவு சுயநலமில்லாம ஓருத்தரால இருக்க முடியாது..எந்தப்பொண்ணுக்கும் பிறந்தக் கொஞ்சநாள்லயே தாய்மை உணர்வு வந்துடும் ..அத அக்கா தம்பிக்கு நடுவுல இன்னும் அதிகமாவே இருக்கும்..சிலர் காதலனை கூட சொந்தப் பிள்ளையா கொஞ்சுவாங்க ..உனக்கு மட்டும் எதுவுமே இல்லாம ..இந்த உலகத்தோடு ஆசாபாசங்களை துறந்தவளா இருக்க எப்புடி முடியும்..

அவள்: ஆமாம் எனக்கு பாசம் இல்ல, பரிவு இருக்கு, மனிதாபிமானம் இருக்கு..அடுத்தவங்களுக்கு உதவும் மனப்பாங்கு இருக்கு

அவன்: பொய்..இதுயெல்லாம் உன் வார்த்தைல மட்டும்தான் இருக்கு..அடுத்தவங்களுக்கு உதவுற மனப்பான்மை இருந்தா உன்ன சுத்தி ஒரு அன்புக் கூட்டமே இருந்துருக்கும்..ஆனா உனக்கு ஒரு பெண்தோழிகூட இல்ல ..உனக்கு அடுத்தவங்களுக்கு உதவும் மனம் மட்டும்தான் இருக்கு ..ஆனா இந்த கர்பப்பை தானத்துக்கு வேறேதோ காரணமிருக்கு..அதை மறைக்க இந்த அன்னைதெரேசா நாடகமாடுற..


அவள்: உன்கிட்ட நான் எதையும் நிரூபிக்க விரும்பல..அது எனக்குத் தேவையுமில்ல..உன் நல்லதுக்காக சொல்றேன் தயவு செஞ்சு என்ன விட்டுட்டு போய்டு ..நீ தெரிஞ்சுக்க விரும்புற விஷயம், தெரிஞ்சதுக்கப்புறம் விரும்ப மாட்ட..இதுவே நான் உன்னைப் பாக்குற கடைசி நாளா இருக்கணும்..புரியுதாடா..நானும் சந்தோஷமாவே இத முடிக்கணும்னு நினைக்குறேன்..அசிங்கப்படுத்திதான் அனுப்பணும்ன்னு நெனச்சா ..(எனக் கத்தி அவன் கையிலிருக்கும் காப்பியை பிடுங்கி அவன் முகத்தில்..)


அவன்: முகத்தைச் துடைத்துக் கொண்டு எதையோ வென்றதாய் சிறுப் புன்னகை தவழ்ந்து வெளியில் சென்றான், அவள் அவனையே கோபத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் சடாரென அவனை நடு ரோட்டில் இருசக்கர வாகனம் வேகத் தடையாய் அவன்மேலேறிச் சென்றது....

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (1-Aug-17, 9:49 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 375

மேலே