காதல் தாகம்

அதிகாலை நேரம் மூன்று மணி இருக்கும் மூன்று காவல் அதிகாரிகளின் வண்டி அதி வேகத்தில் சைரன் அடித்து கொண்டு ஆடம்பர அபார்ட்மெண்டுக்கு விரைந்து வந்தன. பின்னாலே ஒரு ஆம்புலண்சும் மின்னல் வேகத்தில் சைரன் அடித்து கொண்டு வந்தது. ஆடம்பர அடுக்கு மாடி அபார்மெண்ட் அடிவாரத்தில் ஒரே ஆரவாரமாக இருந்தது அணைத்து வாகனங்களின் ஒலியும் ஒளியும் சேர்ந்து மக்களின் ஆரவாரமும் பதற்ற நிலையும் கலந்து அவ்விடமே பகல் போல் காட்சி அளித்தது.

காவல் அதிகாரிகள் விரைந்து ஆறாவது மாடிக்கு ஓடினர். 3பி எண் வீட்டில் நுழைந்தது. அங்கே ரத்த வெள்ளத்தில் ஆயிஷா நிர்வாணக் கோலத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தாள். முதலில் நுழைந்த இன்பெக்டர் ஆகாஷ், உடனே பெண் போலிஸ் துர்காவை கருப்பு பையால் உடலை மூடச் சொன்னார்.. ஆகாஷ் மற்ற போலிஸை ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று கண்டறிய சொல்லிவிட்டு, வெளியே குழுமி இருக்கும் மக்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார். இந்த வீடு யாருடையது? என்று அங்கே நின்றிருந்த ஒருவனிடம் கேட்க . அவனோ இது நம் நாட்டின் புகழ் பெற்ற பத்திரிக்கை நிருபர் ஆனந் ரோஷனின் உல்லாச வீடு என்றான்..

அடுத்த நொடி ஆகாஷின் போலிஸ் வாகனம் ஆனந் ரோஷனின் வீட்டை நோக்கி பாய்ந்த்து. . ஆனந் ரோஷனை கைது செய்தான் ஆகாஷ் ஒரு பெரிய போலிஸ் படையுடன். ஆனந் ரோஷனோ சற்றும் கலக்கமில்லாமல் சிரித்த வண்ணமே போலிஸ் நிலையத்திற்கு சென்றான். .விசாரித்ததில் ஆனந் ரோஷனின் கள்ளக் காதலிதான் ஆயிஷா. தான் அவளை தன்னுடைய உல்லாச வீட்டில் தங்க வைத்திருந்ததாகவும் காதல் முற்றி உடல் ரீதியாக பல தடவை இணைந்தும் இருக்கிறோம் என்று ஒப்புக்கொண்டான். .ஒப்புக் கொண்டபின் தன் மனைவியைப் பார்த்தான், அவள் முகத்தில் கோபத்தை விட வேதனத்தான் அதிகம் இருந்தது.. கொலை நடந்த

அன்றிரவு அவளுடன் உல்லாசமாக இருந்தது உண்மைதான், ஆனால் தான் கொலை செய்யவில்லை என்றான். அன்று பத்து மணிக்கெல்லாம் வீட. சென்றுவிட்டேன். . அன்று ஆயிஷா தன்னை கல்யாணம் செய்துக்கொள்ளளும்படி வற்புறுத்தினாள். ஆதலால் எங்களுக்குள் வாக்குவாதம் முற்றி சண்டை வந்தது. அதானால்தான் பத்து மணிகெல்லாம் கிளம்பிவிட்டதாக தெரிவித்தார்.

ஆகாஷ் மனதுக்குள் இவர் பத்து மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டார், ஆயிஷாவின் கழுத்து அறுக்கப்பட்ட மணி நள்ளிரவு பண்ணிரண்டு. இடைப்பட்ட நேரத்தில் வேறு எவனோ வந்திருக்க வேண்டும் என்று சந்தேகம் எழும்பியது. ஆயிஷாவை பற்றி விசாரிக்க அவள் படிக்கும் கல்லூரிக்கு சென்று விசாரித்தான். அங்கே அவளுக்கு மற்றொரு காதலன் இருப்பதாக தெரிய வந்தது. அவன். பெயர் சங்கர். அவனை ஆகாஷ் தந்திரமாக விசாரித்ததில் ஆனந்த் ரோஷனுடன் ஆயிஷா தொடர்பில் இருப்பதை அறிந்த நான் சமயம் பார்த்து அவளை அனுபவித்து கழுத்து அறுத்துக்கொன்று விட்டேன். ஆனந்த் ரோஷன் விடுதலை செய்யப்பட்டார்.

எழுதியவர் : பவநி (31-Jul-17, 2:00 pm)
Tanglish : kaadhal thaagam
பார்வை : 474

மேலே