“போட்டி”

“எம்.டி. ஸார் நீங்க செய்யறது உங்களுக்கே நியாயமா இருக்கா?” கோபமா கேட்டாள்” கோகிலா
ஒரிரு நாள் கழித்து…..” ரொம்ப அநியாயம், அக்கிரமம் நீங்க பண்றது, என ”சாருலதா, சண்டைக்கோழி போல் சிலிப்பிக் கொண்டாள்,
‘பல வருடங்களுக்கு முன்பு நடந்த இன்டர்வீயு அன்றே இவர்களுக்குள்தான் சரியான போட்டி… முடிவில் இருவருமே தேர்வாகி விட்டனர் செக்ஷன்களை முடிவு செய்து , கோகிலா அக்கவுன்ட் செக்ஷனின் தலைவியாகவும், சாருலதா லையாசன் ஆபிசராகவும் ஒரே நாளில் நியமிக்கப்பட்டனர்
கம்பெனியின் ஜி.எம். போஸ்ட் காலியாக உள்ளது. அதற்கு தான் போட்டி ….இருவரும் எல்லா விஷயத்திலும் சமஅந்தஸ்தில் உள்ளதாலும், ஒரே நேரத்தில் அப்பாயின்ட் ஆனதாலும் “ மற்றவளுக்கு ஜி.எம். போஸ்ட் போய் விடுமோ... என சந்தேகப்பட்டு ...தனக்குத்தான் ஜி.எம். போஸ்ட என போட்டி போடுகிறார்கள்.
தலைவலியைத் தானே தேடிக் கொண்டது போல திருதிருவென முழித்தான் “இளம் தொழிலதிபரான இராம்குமார் ‘ஒரு வழியாய் தெளிவான முடிவக்கு வந்தவனாய் ; “பி.ஏ-வை இன்டர் காமில் கூப்பிட்டு, இன்ஸ்ட்ரெக்ஷன் கொடுத்தான்’
” ஜி. எம். போஸ்டிங் ஆர்டர் தயாராகி அதில் கையெழுத்திட்டு விட்டு, வீட்டுக்குப் போனான்
ஜி. எம் சுழல்நாற்காலியில் சுழன்று கொண்டிருந்தாள் “சாருலதா”
கோகிலாவுக்கு கொதிக்க ஆரம்பித்து விட்டது எம்.டியிடம் பேசுவதையே தவிர்த்து, முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு, ஊழியர் களிடையே “அண்ணே, நீங்களே சொல்லுங்க, நியாயமா நான்தானே ஜி.எம். நாற்காலியில் உட்காரணும்…அங்கே பாருங்க சாருலதா இன்னாம்மா சுழல்நாற்காலியை சுத்தி என்னைக் கடுப்பேத்துறா“ புலம்பிக் கொண்டிருந்தாள். ஒரு வாரம் கடந்திருக்கும் கோகிலாவின் கையில் ஒரு கவரினை பி.ஏ. தந்தார்..
. அதைப் பிரித்தாள்… அதில் இரண்டு கடிதங்கள்,.. ஓன்றில்; டிஸ்மிஸ் ஆர்டர் இருக்க தலைசுற்றுவது போலிருந்த து. சமாளித்து கொண்டு அடுத்த கடிதத்தைப் படித்தாள் கோகிலா அம்மாவிடம் பேசி விட்டேன், விரைவில் என் “அம்மாவுக்கு மருமகளாக வரலாம்” என்று இருந்தது.
சுழல்நாற்காலியில் சுழன்று கொண்டிருந்த சாருலதாவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே தன் வேலையைக் கண்ணும்கருத்துமாய் செய்தாள் கோகிலா.
-- கவிஞர் கே. அசோகன்.