நாணமின்றி ஞானமின்றி
இறந்தகாலம் மாறியது
இப்பொழுது கூறியது
வருங்காலம் தேவையில்லை
வாழ்ந்து பார்க்க தோணவில்லை
நாணமின்றி பெற்ற அனுபவம்
ஞானத்திற்கே கற்ற யோகமும்
இப்பொழுதில் ஆனந்தமாய்
இல்வாழ்வை தொடங்கியதே
நாணமின்றி இனி போகாது
ஞானமின்றி அதுபோல் ஆகாது
பிறப்பும் இறப்பும் கடந்த பின்னே
பேரின்பம் வரும் வழிகளிலே தானோ ?