பெண்ணின் பெருமை....

கவிங்கனுக்கு கரு கொடுத்த கலை மகளாய்...

சிறப்பிக்கு சிலை கொடுத்த சித்திரப்பெண்ணாய்...

விஞ்ஞானத்தில் இடம் பிடித்த வீர மங்கையாய்...

நீ படைத்த சாதனை தான் எத்தனை எத்தனை....

பெண்மை என்றாலே....

பொறுமைக்கு பூமியாய்...

பொருளுக்கு.... கடலாய்...

கடமைக்கு நதியாய்...

அழகுக்கு நிலவாய்...

ஆடவருக்கு அரசியாய்....

சேய்க்கு தாயாய்...

இப்படி எத்தனை எத்தனை பண்புகளின்

பாற்கடலாய் நீயடி....

என்னவளே ..........

இனிமேலும் எடுத்துரைக்க என்னிடம்

வார்த்தைகள் இல்லையடி.... .

நல்லவளாய் வல்லவலாய் நங்கை நீ.....

திகழ்ந்திட வேண்டுமடி .....

பாரதி கண்ட புதுமை பெண்ணாய்......

பாரதத்தின் பாவையாய்...

எழுதியவர் : a.buvaneswari (21-Jul-11, 1:17 pm)
பார்வை : 20014

மேலே