அணுகுமுறை

புன்னகை எனும் வாள் கொண்டு
வீழ்த்திடுவோம், உளைச்சல் தரும் சோகம்தனை.!
மகிழ்ச்சி எனும் திரை போர்த்தி
அணுகிடுவோம், காலம் தரும் கஷ்டங்களை.!
நம்பிக்கை எனும் கரம் கொண்டு
துடைத்திடுவோம், தோல்விகள் தந்த கண்ணீரை.!
முயற்சி எனும் கேடயம் கொண்டு
தகர்த்திடுவோம், தோல்விகளை தந்த அணுகுமுறையை.!
பொறுமை எனும் உரம் இட்டு
வளர்த்திடுவோம், தோல்விதனை வெல்லும் கனவுகளை.!


அனைத்து இதயங்களையும் வென்றிடுவோம் புன்னகையை உதிர்த்து எப்போதும்...☺

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (31-Jul-17, 10:22 pm)
பார்வை : 269

மேலே