அவ்வப்போது
அவ்வப்போது
நான்
தேனியாகிறேன்
உன் இதழினை
முத்தமிடும்போது !
அவ்வப்போது
நான்
புலவனாகிறேன்
உன் அழகினை
வர்ணிக்கும்போது !
அவ்வப்போது
நான்
மழலையாகிறேன்
உன் அன்பினை
அனுபவிக்கும்போது !
அவ்வப்போது
நான்
பிணமாகிறேன்
உன் பிரிவினை
எதிர்நோக்கும்போது !