பொய் நிறைந்த உறவுகள்

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு உறவுகளிடமும்
உண்மையை தேடி தேடி
உண்மையான உறவென்று
எண்ணி எண்ணி
என்னிதயம் ஏமாற்றம்
கண்டு கண்டு
அனைத்தும் பொய் பொய்
என்றே எண்ணுகிறது .......

வெறுத்து விடுகிறேன்
இறுதி வரை உறவுகள்
நிலைத்து நிற்பதில்லை .......

கோபத்தில் ஏமாற்றங்களில்
வலிகளில் என்னையே நான்
வெறுத்துவிடுகிறேன் மொத்தமாய் .......

சரியோ தவரோ
எனக்கான உறவுகளிடம்
உண்மையுடன் பழகுகிறேன் ......

அதை என்னை சார்ந்த
உறவுகளிடம் எதிர்ப்பார்ப்பதால்
ஏமாற்றம் காண்கிறேன் .......

வெறுத்து விட்டேன் .....
இன்று மொத்தமாய் ......

நேசித்த உறவை .....

எழுதியவர் : sagi (1-Aug-17, 10:41 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 17398

மேலே