ஏற்றுக்கொள்வாயா

கண்ணங்களே கண்ணீரால் நனைத்துவிட்டு
எண்ணங்களே எழுத்தால் இனைத்துள்ளேன்
என் தோழியே இதை வாசிப்பாயா...
என்னை பற்றியும் யோசிப்பாயா...

நீரில்லா நிலம் போல
நீயில்லாமல் வாடுகிறேன்...
வேரில்லா மரம் போல
வேதனையுடன் வாழுகிறேன்...

பூஜை செய்த கோவில்
பூகம்பத்தில் புதைவது போல
ஆசை கொண்ட என் மனமோ
அனுஅனுவாய் சிதையுதடி...

என் காதல் வானத்திலே
கண்ணீர் மழைதான் பொழியனுமா...
என் கனவுகள் அனைத்திலும்
கவலைகள் மட்டும்தான் ஆளனுமா...

காட்டாறு வெள்ளத்திலே
காகித கப்பல் என்ன செய்யும்..?
சாதி என்னும் சாக்கடையால்
சாகடிக்காதே என் காதலே..!

என் கனவுகளே
உன் காலடியில் வைத்து கெஞ்சுகிறேன்...
ஏற்றுக்கொள்வாயா..?
ஏற்காமல் கொல்வாயா..?

எழுதியவர் : ந.இராஜ்குமார் (2-Aug-17, 4:55 am)
Tanglish : yetrukkolvaayaa
பார்வை : 958

மேலே