தலைப்பில்லா கவிதை -2
விரல் நுனி தான் பற்றினாய்..
விழுந்து விட்டேன் உனக்குள்..
கடலை அறிய துளி போதாதா?
துளிர் போதுமே
வேம்பின் சுவை அறிய...
தேகம் வேண்டுமா என்ன?
தேன் சுவை அறிய...!
விரல் நுனி போதும் தானே...!
உன் கண்கள் எனும்
காந்த புயல் வீசி
சாய்த்து போட்ட மரம் நான்..
விழுந்த பின்
நுனி என்ன ?
அடி என்ன ?
எல்லாம் மண்ணோடுதான்
எல்லாம் உன்னோடுதான்..!