பிரிவால் வருந்தாதேஏனெனில்

என்னவளே....
ஒரு அந்தமில்லா நூற்கண்டைப் போன்றோர் நாமிருவர்....
அதில் சுற்றப்பட்டிருக்கும்
நூலிழையைப் போன்றது நம் காதல்....
அவ்வப்பொழுது நிகழும்
நம் பிரிவுகளை எண்ணி வருந்தாதே.....
ஏனெனில்,
"நூற்கண்டைப் (நம்மைப்) 'பிரிக்கப் பிரிக்க'....
நூலிழை (நம் காதல்) வளர்ந்துகொண்டுதானே இருக்கும்"..!!! 💚💚

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (3-Aug-17, 7:48 am)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
பார்வை : 206

மேலே