இலுமினாட்டி

இலுமினாட்டிகள்

இலுமினாட்டிகள் என்பவர்கள் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் இப்போது 11 க்கு மேறபட்ட குடும்பமாகி வசிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது

அந்த இலுமினாட்டிகள் தான் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலிலும் பொருளாதார மற்றும் அரசியல் மற்றும் அனைத்தும் இவர்களின் சொல்படித்தான் நடக்கிறது என்று பல நாட்டவர்களால் நம்பப்படுகிறது மற்றும் இவர்கள் தான் ஒவ்வொரு நாடுகளிலும் நடுக்கும் தேர்தலில் யாரை வெற்றிப்பெறச்செய்வது தோல்வி பெறச்செய்லது என்பதெல்லாம் இலுமினாட்டிகள் தான் தீர்மானிப்பார்கள் என்று கூறப்படுகிறது
இந்தியா உட்பட ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் அனைத்து பொருளாதார,அரசியல் விஷயங்களும் இவர்களால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது
அனைத்து நாடுகளில் கலவரம் முதல் போராட்டங்கள் போர் வரை இவர்களால் தான் நடத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது

ஆனால்
எனக்கு இலுமினாட்டிகள் மீது துளியும் நம்பிக்கை இல்லை
ஒரு நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் சாதாரண சாமானியன் எனும் இலுமினாட்டி தான் தீர்மானிப்பான் என்பது நகைப்புக்குறியது

இலுமினாட்டிகள் தங்களை உலகமே திரும்பிப்பார்க்க வேண்டும் என்ற நோக்கில் சென்ற நூற்றாண்டில் ஒருவர் தன்னை இலுமினாட்டி என்றும் தனக்கென்று தனி வழிமுறைகள் வித்தியாசமான பூஜை முறைகள் மற்றும் தன்னை வித்தியாசமாக அதே சமயம் கெத்தாக அமைத்துக்கொள்ள இலுமினாட்டியையும் அதன் இரகசிய பழக்க வழக்கங்களையும் அமைத்திருப்பார்
பின் அவரது வாரிசு வழியாக இப்போது 11 குடும்பங்களாகி தாங்கள் தான் இலுமினாட்டிகள் உலகில் நடக்கும் அனைத்து விசயங்களுக்கும் தாங்கள் தான் காரணம் என்று அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு முட்டாள் தனமாக அவர்களும் ஏமாந்து பிறரையும் ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

மற்றுமொரு எனது கருத்து
இலுமினாட்டிகள் என்பவர்கள் உலக போதைப்பொருள் வியாபாரிகளாகவோ தீவிரவாதிகளாகவோ இருக்கலாம் இது போன்ற தவறுகளை யாருக்கும் தெரியாமல் அரங்கேற்ற அதற்க்கு இலுமினாட்டி என்று பெயர் வைத்துக்கொண்டு சட்டத்தின் பிடியில் படாமல் கல்லச்சந்தையை உலகமயமாக்கியிருக்கலாம்
அல்லது உலக நாடுகளுக்கிடையே போரை மூட்டி விட்டு போர் நடக்கும் நாடுகளுக்கு இந்தப்பக்கமும் ஆயுத வியாபாரம் செய்து அந்தப்பக்கமும் ஆயுத வியாபாரம் செய்யும் தொழிலில் எப்பிரச்சனையும் வராமவிருக்க இலுமினாட்டி எனும் பொய் மாயை உருவாக்கி வாழ்பவர்களாக இலுமினாட்டி இருப்பார்கள்

ஆனால் இலுமினாட்டி என்பது பொய் இலுமினாட்டி எனும் பொய்யை உருவாக்கி அதன் பின்னால் சட்ட விரோதங்கள் உலகளவில் நடைபெறும்
இது தான் இலுமினாட்டியாக இருக்கும் என்பது எனது கருத்துஎனக்கு எந்த உணவு அருந்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த உணவை நான் அருந்துவேன் அதற்க்கு எப்படி இலுமினாட்டி காரணமாக இருப்பான்
என் உரிமைகள் பறிக்கப்படும்போது நான் போராடுகிறேன் அதற்க்கு எப்படி இலுமினாட்டி காரணமாக இருப்பான்
தேர்தலில் நான் யாருக்கு ஓட்டு போட விரும்புகிறேனோ அவர்களுக்கு ஓட்டு போடுகிறேன் அதற்கு எப்படி இலுமினாட்டி காரணமாக இருப்பான்

என்னைப்பொருத்தவரை இலுமினாட்டி எனும் பொய் மாயை உருவாக்கி அதன் பின்னால் சட்ட விரோதங்கள் உலகளவில் நடை பெறலாம்.

எழுதியவர் : விக்னேஷ் (3-Aug-17, 1:49 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 1973

மேலே