பேலியோ டயட் சர்ச்சை

உணவுக்கான மாபெரும் சர்ச்சை அனைத்து நாட்டிலும் எழுந்துள்ளது.இதன் நோக்கம் உடலுக்கு நல்ல உணவு வேண்டும் அதன்மூலம் சராசரி ஆயுள்காலத்தையாவது நாம் தொட்டு வாழ்ந்து விட வேண்டும் என மக்கள் நம்புவது இயல்பு.இன்று நாம் அனைவரும் விரும்பி தேடுவது நோயை கட்டுக்குள் வைத்து கொள்ளும் உணவை தேடுகிறோம்.ஆனால் நாம் என்ன உணவு உண்கிறோம் என்பதை கவனிப்பதில்லை,இன்று நாம் உண்ணும் உணவில் பலவிதமான எண்ணைய்கள்,நெய்,உப்புகள்,தண்ணீர் இவை உணவில் பெரும் பங்கு வகிக்கின்றன.இவற்றை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் கொள்ளவேண்டும்.
எண்ணையை பொருத்தவரை சற்று நிதானமாக யோசித்தால் செக்கு எண்ணையே சரி என்கிறார்கள்..எனென்றால் நமக்கு தேவையான உணவை நாமே தயாரிப்பதால் நமக்கு எந்த சந்தேகமும் வராது.இது போன்ற உணவுப்பொருளை நீங்களே தயாரியுங்கள் உங்கள் உடலுக்கு அதுவே நல்லது.
நோய் என்பதை பொருத்தவரை நம் வாழ்வில் அது இயல்பான ஒன்றுதான் என்றாகிவிட்டது இதுதான் பரிணாமம் என்பது போல தோன்றுகிறது.. நாம் எடுக்கும் உணவில் அதை கட்டுக்குள் வைக்கலாம்.மிதமான பழங்கள் அதிகஅளவு காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும்.குறிப்பாக கீரைகள் மற்றும் வேர் நன்கு கீழ் சென்று வளர்ந்த மரங்களின் பழம் மிகவும் நல்லது,உதாரணமாக நாவற்பழம்,நெல்லிக்கனி,அத்திபழம் மற்றும் கொய்யா போண்றவை மிக மிக நன்மையை தரக்கூடிய பழங்கள் ஆகும், இவை பூமியில் அதிக ஆழம் சென்று நூண்ணுட்ட சத்துக்களை பெறுவதால் நன்மை பயக்கும்.நமக்குதேவையான ஒருசில காய்கறிகள்,கீரைகளை நாமே உருவாக்க முயற்சி செய்யலாம்.

உங்கள் கேள்வி புரிகிறது.நாம் இன்னும் தலைப்பிற்கு செல்லவில்லையே என்பது,ஆம் இப்போது பேலியோ என்றழைக்கும் டயட் பரவலாக பேசப்படுகிறது.இவை ஆதிமனிதனின் உணவு முறையாகும் .சற்று யோசிப்போம்.... ஆதி மனிதன் அன்று உணவு பொருளை விளையவைக்கவில்லை,மாறாக இயற்கையாக விளையும் பழங்களை மரத்தில் இருந்து பெற்று உண்டான்,பின்பு அவை பருவநிலை மாற்றம் காரணமாக கிடைக்காமல் போனதால் விலங்குகளை வேட்டையாடி சுட்டு சாப்பிட்டான் அதில் மசாலா பொருள் மற்றும் எண்ணைய் முற்றிலும் இல்லை...
இன்று வளர்க்க கூடிய விலங்குகள் மற்றும் கோழிவகைகள் முழுவதும் உணவுப்பொருள்களாக மாறும் வரை பல படிநிலை மாற்றம் பெற்று வருகின்றன..விலங்குகளுக்கு கொடுக்கப்படும் ஹார்மோன் ஊசிகள் முதல் அவை உண்ணும் உணவு வரை வேதிப்பொருள் அடங்கியுள்ளது.. இவை இந்த காலகட்டத்தில் கவனிக்கபடவேண்டியவையாகும்..
ஆதி மனிதன் சாப்பிட்டு விட்டு அதிக அளவு உழைப்பை கொடுத்தான்,அதிக தூரம் நடந்து சென்றான் கடுமையான இயற்கை வழியில் வாழ்ந்ததால் அவன் உடல் நலம் கெடாமல் இருந்தது.. இந்த கால மனிதன் உணவுமுறையான பேலியோ டயட் முறையில் வாழ முயற்சி செய்யும் போது ஆதிமனிதன் அளவு உழைப்பை நாம் கொடுப்பதில்லை..
உதாரணமாக பாடிபில்டிங் துறையில் இம்முறை கடைபிடிக்கபடுகிறது..அவர்கள் விலங்கு வகை உணவு உண்பதோடு இல்லாமல் அதைவிட பல மடங்கு பயிற்சி முறைகள் அதிகம் செய்வதை அவர்கள் உடலை பார்த்தாலே தெரியும்,அதோடு இல்லாமல் முறையான மருத்துவ பரிசோதனைகள் அவசியம்..

இப்பொழுது புரியும் என நினைக்கிறேன் ஆதி மனிதன் உணவு உண்ட பிறகு அதற்கு தகுந்தாற் போல உடலுக்கு பயிற்சி அவசியம் என்பதை அறிந்துகொண்டீர்கள்..

அதுமட்டும் இல்லாமல் பேலியோ டயட் அனைவரின் உடலும் சமமாக ஏற்றுகொள்ளுமா என்பது சந்தேகம்தான்...

தன்னுடைய உடல் திறனை அடிப்படையாகவும் மருத்துவரின் ஆலோசனைப்படி பேலியோ உணவை எடுத்து முயற்சி செய்யலாம்..

மேலும் பேலியோவில் ஒருசில மரங்களின் கொட்டைகளான முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்றவையும் அளவோடு உண்ணுவது நலம்..
எந்த உணவு பொருளாக இருந்தாலும் அளவுடனும் இடைவெளி அவசியமாகும்..

மேற்கூரிய உணவு முறைகள் பொருந்தவில்லை என்றால் வழக்கமாக உண்ணும் உணவில் கவனமுடனும் நாமே நம் உணவை தயாரிக்கலாம் ,அவை நலமே பயக்கும்..

செக்கு எண்ணைய்,ஆர்கானிக் முறை எனப்படும் இயற்கை முறையில் விளையும் உணவுப்பொருள்கள் ,நீங்கள் உருவாக்கும் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் உங்களுக்கு நன்மையை தரும்..
உங்கள் உடலுக்கு தகுந்த உணவுப்பொருளை உங்கள் உடலே சொல்லும் ,அவற்றை மிதமாக உணணுங்கள..
பேலியோ மற்றும் மற்ற உணவுமுறையும் மருத்துவ ஆலோசனை படி உண்பதே நலம்..
உணவு குறித்து பல கருத்து நிலவினாலும் இயற்கை உணவு
உடலுக்கு ஏற்றவை என்பதால் அதை நீங்கள் எடுத்துகொண்டால் நலமே என கூறி முடிக்கிறேன்..
-புதுவை சிவசக்தி

எழுதியவர் : shivasakthi (2-Aug-17, 12:37 am)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 157

சிறந்த கட்டுரைகள்

மேலே