சொல்லாத காதல்

காண்பவர் எல்லாம் கண்டு-என்
மனம் இப்படி பதறவில்லை..
ஏனோ ?
அவனை கண்டால் மட்டும்
கைகளும் கவி புனைகிறது..!
இதயத்தின் இசை,
இனிமையாய் காதில் கேக்கிறது..
அவனை கண்டபோதெல்லாம்!
அவன் அப்படி அழகில்லை,
ஆனாலும் ஏனென்று தெரியவில்லை?
ஒருநொடி கூட அவன் முன் நின்று பேசியதில்லை
துளி விவரம் கூட அவனை பற்றி அறியவில்லை
இருந்தும் மனம் ஏன் அவனை தேடுகிறது?
கேள்வி எழுந்த என் மனம்,
பதில் தேட ,
வினவும் நினைவுகளும்,
விலாசமென அவனையே காண!
இது தான் காதலா?
இவையும் காதலா?
இசைந்தது காதலை சொல்ல
அவனோடு!
ஆனால் அவனோ
ஏற்கனவே காதல் வசப்பட்டுள்ளான்.!
நினைவுகளும் சிதறி,
மனமும் அழுது,
தண்டனை கொண்டது உணர்வுகளும்..
தாங்கமுடியாமல் தவிக்கும்,
வலிகளும் வார்த்தையின்றி,
மறைந்து போயின..
இப்படிக்கு சொல்லாத காதல் ..!