மனிதன் உயர்திணையாம்

வீட்டுக்கு வீடு குப்பை சேர்கிறது
மனத்துக்கு மனம் அழுக்குச் சேர்கிறது.

ஏமாற்றுவது எப்படி என்றே
சிலர் யோசிக்கிறார்கள்.

ஏமாறாமல் இருப்பது
எப்படி என்று
நாம் யோசிக்க வேண்டியுள்ளது.

எங்கேயாவது
பள்ளங்கள் இருக்கலாம்.
பள்ளங்களே பாதைகள் ஆனால்..

அநீதி எங்கே இல்லை?
நீதி மன்றங்களிலேயே
நிகழ்கிறது.

எச்சரிக்கையோடேயே
வாழ வேண்டி இருக்கிறது
எதார்த்தமாய் இருந்தால்
ஏமாந்து போவோம்.

இதில் வேறு
நாகரிகம், பண்பாடு,
கலாச்சாரம்,
அறம், விழுமியங்கள் என்ற
அண்டப் புழுகுகள்.

மனிதன் உயர்திணையாம்.

சிரிக்காமல்
இருக்க முடியவில்லை.

எழுதியவர் : கனவுதாசன் (5-Aug-17, 12:26 pm)
பார்வை : 59

மேலே