வசிக்கிறார்கள்
நான்
கண்டு கொள்ளாதவர்களும்
என்னைக்
கண்டு கொள்ளாதவர்களும்
உண்டு.
இவனிடம்
என்ன இருக்கிறது?
என்ன இருந்தால் என்ன?
என்ற எண்ணம்.
கண்டு கொள்ளாமல்
இருப்பதில்
சங்கடம் இல்லை.
தேவைகளின் பொருட்டு
இயங்குகிறது
மனித உலகம்.
மனிதர்கள் வாழ்கிறார்களா?
வசிக்கிறார்கள்.