நண்பர் தினம்

நாட்கள் நகர்த்தி
நாளோடு நடுங்க
வைத்தவன்..
அன்றும் இன்றும்
நன்மை தீமை
துணையில் இருப்பவன்...

ஆளும் அறிவை
அனைத்து நொடியில்
அடக்கியவன்
அவன் இவனோ
ஆயுள் முழுதும்
முடக்கி ஆள்பவன்...

முன்னோடி முனையில்
உயிர்மூச்சை முன்நிறுத்தி
உலகோடு ஆள்பவன்
என் தோழன்...
தோல்வி தொந்தரவில்
துணையோடு துன்பத்தை
தூக்கி எறிந்தவன்..

உறவாக உயிராக
உண்மையாக
வாழ்வின் விளக்காக
விளக்கும் நண்பணுக்கு...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

~~~~~லாவண்யா~~~~

எழுதியவர் : லாவண்யா (6-Aug-17, 1:20 pm)
சேர்த்தது : லாவண்யா
Tanglish : nanbar thinam
பார்வை : 162

சிறந்த கவிதைகள்

மேலே