பாசம்

****
மழைக்கு ஒதுங்கிய சிறுவன் மரத்தடிக்கு வந்தான்..
கையில் ஒரு காகித பொட்டலம்..
பாதுகாப்பாக கால்சட்டையில் வைத்தான் நனையாதிருக்க..

அருகில் நின்றவர் அதட்டியபடி கேட்டார்..
ஏனிந்த பதற்றம்.. எதை மறைக்கிறாய்?
எங்கிருந்து வருகிறாய் என்றவரிடம்
குளிரில் நடுங்கியபடி கூறினான்..

வீட்டில் படுத்துள்ள அம்மாவிற்கு உணவு எடுத்து செல்கிறேன் என்றவனிடம்.. எங்கு வாங்கினாய்..திருடனியா என்று மிரட்டினார்.

இல்லை சார்..எனக்கு பள்ளியில் தந்த மதிய உணவில் சிறிது மட்டும் சாப்பிட்டு மிச்சத்தை எடுத்து காகிதத்தில் மடித்து எடுத்து வருகிறேன். மழையில் நனையாதிருக்கவே கால்சட்டையில் வைத்தேன். பாவம் அம்மா பசியுடன் இருப்பார்கள் என்றதும் கேட்டவர் கண்கலங்கினார்.
தாய்ப்பாசத்தின் உன்னதத்தை உணர்ந்து உள்ளம் சிலிர்த்தார் ...

மதிய உணவே மிகவும் சிறிது அளவு தான். ஆனால் அதில் பாதியை மட்டும் சாப்பிட்டு விட்டு மீதியை தனது தாய்க்கு எடுத்து செல்லும் அந்த செயலால் மிகவும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த அந்தப் பெரியவர் கட்டி அணைத்து வாழ்த்தினார்.

தானே வலிய சென்று மேலும் உணவை வாங்கி அவன் கையில் அளித்து பிறகு தனது வாகனத்திலயே அவனை வீட்டிற்கு அழைத்து சென்றார்

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

இது கற்பனையா உண்மையா என்று ஆய்ந்திடாமல் இதில் வரும் இரண்டு பாத்திரங்களில் உங்களை கவர்ந்தவர் யார் என்றும் அதற்கான தகுந்த காரணத்தை பதிவிட வேண்டுகிறேன்.

பழனி குமார்
5.8.17

எழுதியவர் : பழனி குமார் (6-Aug-17, 3:05 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : paasam
பார்வை : 544

மேலே