கடல் பயணம்

நீல வானம் !
நிசப்தமான இரவு !
கடல் அலையின் நடுவினிலே -
கற்பனை குதிரை !
தரை தட்டும் வரை -
தொடர் பயணம் !

கடல் அலையை மிஞ்சிய -
அரசியல் சப்தம் !
நாளொரு வண்ணம் ;
பொழுதொரு சட்டம் !

சிந்திக்க நேரமில்லை !
சிரமத்திற்கோ அளவே இல்லை !
சீர்திருத்தம் எனும் பெயரில் -
சிலந்தி கூட்டுக்குள் நான் !

கடல் பயணம் -
கச்சிதமாய் தொடருமோ ?
பாதியிலே இறக்கிவிடப்படுவேனோ ?
அரசின் செயல்களினால் -
அதிர்ச்சியில் நான் !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (8-Aug-17, 11:40 am)
Tanglish : kadal payanam
பார்வை : 550

மேலே